ஜம்முவின் விமானப்படை தளத்தில் இரு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் பெருமளவில் சேதம் எதுவும் இல்லை என்றாலும் ட்ரோன் வாயிலான தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இது ஐநா சலையிலும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆயுதம் ஏந்திய ட்ரோன் எதிர்ப்பு கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை சமாளிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியா அடையாளம் கண்டுவிட்டதாகவும் விரைவில் ட்ரோன் எதிர்ப்பு கொள்கை உருவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய டிரோன்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட டிரோன்களை கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.