புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஜான்பால் நகரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வந்தது. இங்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பலர் அனுமதி இன்றி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் -7 ம் தேதி இரவு பலர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி சூதாட்டத்திற்காக வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் வானரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் உட்பட 4 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வினோத்தை தவிர மீதம் உள்ளவர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், இதில் முக்கிய குற்றவாளியான வினோத் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர் வேல்ராம்பேட் ஏரிகரை பகுதியில் சுற்றி திரிவதாக சிறப்பு அதிரடிப்படை போலிசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்று போலிசார் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது அங்கு வினோத் தனது கூட்டாளி திலிபுடன் ஏரிகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்த சமயம் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,