கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்தம் 2 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து உள்ளனர்.
மேலும், தொடர்ந்து 33ஆவது நாளாக பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 726 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கையானது 3 லட்சத்து 77 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இந்தியா முழுவதும் 9 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 72 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.