மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு 15 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக உயர்த்தி சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநில காவல் துறையின் அதிகார வரம்புக்குள், எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் அதிகார மோதல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், டார்ன் தரன் மற்றும் பதான்கோட்டி ஆகிய பகுதிகள் மாநில காவல் துறையின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் நிலையில் அப்பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல் என சாடியுள்ளார். இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார்.