வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்...!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது  'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்...!
Published on
Updated on
1 min read

இரண்டு ஆண்டுகளில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12' ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட N.V.S. செயற்கை கோள், ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.  

இந்த செயற்கை கோள், தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும் என்றும், பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், இரண்டு ஆண்டுகளில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டிற்கு வரும் என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com