பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 16 முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு...

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஜூன் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை  நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 16 முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு...

இது தொடர்பாக  மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்  மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்ட கூட்டறிகையில் இந்த பேரிடர் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளன. மேலும் 5 மாநில தேர்தலுக்கு பிறகு 21 முறை  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எனவே இந்த விலை உயர்வை கண்டித்தும், நாடு முழுவதும் அனைத்து குடும்பத்திற்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் ஆறு மாதத்திற்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.