விளையாட்டு விபரீதமானதால் 3 சிறுவர்கள் பலி

விளையாட்டு விபரீதமானதால் 3 சிறுவர்கள்  பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் வசிக்கும் சிறுவர்கள் மூன்று பேர் விளையாட்டு பந்து என நினைத்து கையெறி குண்டை எடுத்து விளையாடி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையெறி குண்டை பந்து என நினைத்து 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பலியானது போல் வெடி குண்டுகளை விளையாட்டு பொருள் என நினைத்து விளையாடி பல பாகிஸ்தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் என பாகிஸ்தானுக்கு கள்ளசந்தை மூலமாக வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பலர் இருப்பதால் இவர்கள் தயாரிக்கும் கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கின்றனர்.  

இந்த குண்டுகளை வீட்டில் வைத்திருப்போர்களின் குழந்தைகளும் அதிகமாக பலியாகின்றனர். இது போன்ற சம்பவம் நடப்பதை சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வருகிறது.