மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...

விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்கு வந்த போலீசாா் ஆங்காங்கே செல்போன் பாா்த்தபடி அமா்ந்திருந்ததால் பக்தா்கள் பெரும் அவதியடைந்தனா்.

மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழக மட்டுமல்லாது மாநிலங்களில் இருந்தும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள்.

இதில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் படிக்க | குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியீடு...

அதன்படி இந்தாண்டு சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு மாசி மாத கடைசி ஞாயிறான இன்று பூச்சொரித்தல் விழா இன்று தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து வாரமும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவார்கள். 

இந்த நிலையில் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் இருந்து கடைவீதி தேரோடும் வீதி கோவில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் உண்டு உள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட ஈடுபடுவார்கள்.

மேலும் படிக்க | புதன் ஸ்தலத்தில் தேர் திருவிழா... வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்...

அந்த வகையில் இன்று முதல் பூச்சொரித்தல் விழா சமயபுரம் மாரியம்மன் கோவில் சார்பில் கோவில் இணைய ஆணையர் கல்யாணி தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

முதல் வாரம் பூச்சொரித்தல் விழாவான இன்று பாதுகாப்புக்கு வந்த பெரும்பாலான போலீசார் தங்களது பணிகளை செய்யாமல் பல இடங்களில் கடைகளிலே செல்போனை பார்த்துக் கொண்டு ஹாயாக உட்கார்ந்து உள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

மேலும் படிக்க | 3 கிராமங்களுக்கு நடைபெற்ற மீன்பிடி திருவிழா... ஏராளமானோர் பங்கேற்பு...

மேலும் தேரோடும் வீதி கடைவீதி பகுதியில் சாலைகளின் நடுவே தள்ளுவண்டி கடைகளை வைத்தும், 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்திக் ஆக்கிரமித்ததால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.

வருடம் வருடம் நடைபெறும் இந்த முக்கிய விழாவிற்கு இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பாதுகாப்பு அளித்து, கோவில் நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | கோவில்பட்டி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா...