கொரோனா 2-வது அலையின் போது இந்தியாவுக்கு உதவிய நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி...

கொரோனா 2-வது அலையின் போது உதவியதற்காக ஜி 7 நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலையின் போது  இந்தியாவுக்கு உதவிய நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி...

ஜி-7 மாநாட்டில் ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுடன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர்  மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று ஜி 7 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அப்போது  உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கூட்டு முயற்சிக்கு  இந்தியா ஆதரவு அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.  மேலும், கொரோனா 2-வது அலையின் போது இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  

அதேபோல், தடுப்பூசி மூலப்பொருட்கள்  மற்றும்  இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த உதவும் கூறுகள் ஆகியற்றிற்கான விநியோக சங்கிலியை தடையில்லாமல் தொடர வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

மேலும், எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த   உலகளாவிய ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் ஆதரவு ஆகியவற்றிற்கும் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி,  வெளிப்படையான சமூகம் மற்றும் ஜனநாயக சிறப்பு பொறுப்பு ஆகியவை குறித்தும் வலியுறுத்தினார். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com