இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார தடைகளை தமிழர்கள் சந்தித்ததாக தெரிவித்தார்.
ஆனால், இப்போது தான் சிங்கள மக்கள் இந்த தடைகளை புதிதாக எதிர்நோக்குவதாகவும், பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக, வரிசையில் காத்து நிற்பதாகவும் தெரிவித்தார்.
எரிபொருளுக்காக வரிசையில் நின்று, 4 பேர் இறந்துள்ளனர் என்பதை கூறும்போது, அது இலங்கைக்கு அவமானகரமான, கேவலமான விசயம் என்பதை சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்கக்கூடிய, சிங்கள தலைமகனை இனிவரும் காலங்களில் தலைவனாக தெரிவு செய்ய வேண்டும் என்றும், இலங்கை மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.