உலக அறிவுசார் சொத்து அறிக்கை...பின்தங்கிய அமெரிக்கா...முன்னிலையில் இந்தியா!!!

உலக அறிவுசார் சொத்து அறிக்கை...பின்தங்கிய அமெரிக்கா...முன்னிலையில் இந்தியா!!!
Published on
Updated on
1 min read

உலக அறிவுசார் சொத்து அமைப்பின் அறிக்கையின் படி 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலுமிருந்து 3.4 மில்லியன் கண்டுபிடிப்பாளர்கள் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.  இது முந்தைய ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகம்.

சாதனை படைத்த ஆசிய நாடுகள்:

உலக அறிவுசார் சொத்து அமைப்பு அளித்த தகவலின் படி, இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் உலகளாவிய அறிவுசார் சொத்து தாக்கல் குறித்த காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்புகளின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் சாதனையை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னிலையில் இந்தியா:

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இடையூறுகள் இருந்தபோதிலும், கடந்தகால பொருளாதார மந்தநிலையை அது மாற்றியமைத்துள்ளது என்று ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்தியா +5.5 சதவீதம் என்ற அளவிலும் சீனா +5.5 சதவீதம் என்ற அளவிலும் மற்றும் கொரியா குடியரசு +2.5 சதவீதம் என்ற அளவிலும் 2021ம் ஆண்டிற்கான காப்புரிமை விண்ணப்பங்களில் உலகளவில் வலுவான வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.

இது ஆசிய அளவிலான பங்களிப்பில் மூன்றில் இரண்டு பங்காக அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பிந்தங்கிய வளர்ந்த நாடுகள்:

மறுபுறம், காப்புரிமை விண்ணப்பங்களில் அமெரிக்காவின் பங்கேற்பு -1.2 சதவீதமாகவும் ஜப்பானின் பங்கேற்பு -1.7 சதவீதமாகவும் ஜெர்மனியின் பங்கேற்பு -3.9 சதவீதமாகவும் உள்ளது என உலக அறிவுசார் சொத்து அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகரித்த வர்த்தக முத்திரை:

பெரும்பாலான நாடுகளில் 2021ம் ஆண்டிற்கான வர்த்தக முத்திரை தாக்கல் செயல்பாடு அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.  2021 ஆம் ஆண்டில் உலகளவிலான வர்த்தக முத்திரை 18.1 மில்லியனாக உள்ளது எனவும் இது 2020 ஐ விட 5.5 சதவீதம் அதிகமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com