
மயிலாடுதுறை | சீர்காழியில் பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 104 பெண்கள் அணியினர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டி சீர்காழி இரண்டு விளையாட்டு அரங்குகளில் நடைபெறுகிறது. சீர்காழி அனிதா ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூடைப்பந்து முதல் நாள் போட்டியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இப் போட்டிகளில் முடிவில் வின்னர், ரன்னர், செகண்ட் ரன்னர்ஸ் என நான்கு இடங்களை பிடிக்கும் மேலும் சீர்காழியில் நடைபெறும் போட்டி போன்று மயிலாடுதுறை குட் சம்மரிட்டன் பள்ளியில் ஆண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்தமாக மாவட்ட அளவில் ஆண் மற்றும் பெண் இருபால் 296 அணிகள் பங்கேற்க உள்ளனர் இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.