20 ஓவர் போட்டி: இலங்கையிடம் இந்திய அணி போராடி தோல்வி!  

இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
20 ஓவர் போட்டி: இலங்கையிடம் இந்திய அணி போராடி தோல்வி!   
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட க்ருனால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் இந்திய அணியில் பல புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.  டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே மந்தமாக ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான்  40 ரன்கள் எடுத்தார்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. எளிய இலக்கு என்பதால் இலங்கை அணி நிதானமாக ரன்கள் சேர்க்க தொடங்கியது.  இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இறுதியில்  சிறப்பாக விளையாடிய தனஜெயா-கருரத்னே ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இலங்கை அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்தது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com