அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி.. இந்திய அணி திரில் வெற்றி!!

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி..   இந்திய அணி திரில் வெற்றி!!

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று அசத்தியுள்ளது.. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி டப்ளினில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தீபக் ஹுடா, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தீபக் ஹுடா 104 ரன்களும், சஞ்சு சாம்சன் 77 ரன்களும் விளாசினர்.

இதனையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, வெற்றிக்காக கடுமையாக போராடியது. முடிவில், 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம், 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தீபக் ஹுடாவுக்கு, ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.