சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்களிடையே மோதல்...போலீசார் தடியடி!

சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...டிக்கெட் வாங்க  முண்டியடித்த  ரசிகர்களிடையே மோதல்...போலீசார் தடியடி!

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை வாங்க முண்டியடித்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஐபிஎல் டி20 யின் சீசன் 16 வது லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் ரசிகர்கள் ஒவ்வொரு ஆட்டத்தொடரையும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கண்டுகளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டை காண்பதற்கு சென்னை சேப்பாக்கத்தில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் கூட ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க : திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...யார் யார் எந்தெந்த தேதிகளில் உரையாற்றுகிறார்கள்?

அந்த வகையில், இன்று மாலை 3.30 மணிக்கு உத்தரபிரதேசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன. இதற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், வரும் மே 6ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை முதலே தொடங்கி நடைபெற்று வருவதால், டிக்கெட்டை வாங்குவதற்கு ஏராளமான ரசிகர்கள் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.