ரியல் ஜூலனுக்கு ரீல் ஜூலன் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி தனது ஓய்வு குறித்து அறிவித்ததை அடுத்து, நடிகை அனுஷ்கா ஷர்மா அவரைக் குறித்து பதிவிட்டிருக்கிறார்.
ரியல் ஜூலனுக்கு ரீல் ஜூலன் வாழ்த்து!
Published on
Updated on
1 min read

பத்தாயிரம் பந்துகளுக்கும் மேல் வீசிய பெண் கிரிக்கெட் வீரரான ஜூலியன் கோஸ்வாமி, இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். 12 டெஸ்ட்டுகள், 68 சர்வதேச டி20, 203 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் என பல போட்டிகளில் ஜூலியன் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார்.

இது வரை, டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும், மகளிர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2534 விக்கெட்டுகளையும், மகளிர் சர்வதேச டி20 போட்டிகளில் 56 விக்கெட்டுகளையும் எடுத்து உலகளவில் தனக்கென்று கிரிக்கெட்டில் ஒரு இடம் பிடித்த ஜூலியன் கோஸ்வாமி தனது  ஓய்வை அறிவித்த நிலையில், பலரும் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவரது பையோபிக்-கில் நடித்த நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு முன்னுதாரணம், ஒரு ஜாம்பவான் நீங்கள். உங்களது பெயர் வரலாற்றில் எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்திய கிரிக்கெட்டில், மகளிருக்காக புதிய பாதையை உருவாக்கிய ஜூலியனுக்கு நன்றி” என கமெண்ட் செய்திருக்கிறார்.

இந்த பதிவு தற்போது படு வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com