விம்பிள்டன் டென்னிஸ் ... முதல்முறையாக காலிறுதியில் நுழைந்தார் ஆஷ்லி பார்ட்டி...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஃபெடரர், ஆஷ்லி பார்ட்டி உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

வாரணாசியில் 451 கோடி ரூபாய் அமைய உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்தி மோடி அடிக்கல் நாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமருக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு, அடுத்த மாதம் தொடங்கும் ஐசிசி உலகக் கோப்பைக்கு இந்திய அணி அணியும் 'ட்ரீம் 11 இந்தியா' என எழுதப்பட்ட ஜெர்சியை, கிரிக்கெட் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.
தொடர்ந்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் 451 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் சர்வ தேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். இந்த அரங்கத்தின் கருப்பொருள் கட்டிடக்கலை சிவபெருமானை குறிக்கும் வகையில் பிறை வடிவ மேற்கூரைகள், திரிசூல வடிவ இரவு விளக்குகள், படித்துறை படிகள் அடிப்படையிலான இருக்கைகள் இடம்பெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் பிசிசிஐ அதிகாரிகள் ரோஜர் பின்னி, ஜெய் ஷா மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மைதானம் வாரணாசி மற்றும் முழு பூர்வாஞ்சல் இளைஞர்களுக்கான பரிசு என்றார். மேலும் சர்வதேச விளையாட்டுகளில் இந்தியா கண்டுவரும் வெற்றி, விளையாட்டு மீதான பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு சான்று என்றும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் மட்டுமே அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானங்கள் இருந்தன. ஆனால், தற்போது தொலைதூரத்தில் உள்ள வீரர்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.
இதையும் படிக்க || வைகை ஆறு சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!!
சென்னையில் தொடங்கிய 'த்ரீ எக்ஸ் த்ரீ' எனப்படும் தேசிய சாம் பியன் ஷிப் கூடைப்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேறியது.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்
பில் நடைபெறும் இந்த போட்டியின் ஆடவர்
பிரிவில் 30 அணிகளும், மகளிர்
பிரிவில் 26 அணிகளும் களமிறங்கி உள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதல் சுற்றில் 72 அணிகள் விளையாடிது.
இதையும் படிக்க : ”தமிழ்நாட்டிலிருந்து திமுகவை நீக்குவதற்காக இ பிஎஸ் போராடி வருகிறார்" - ஆர். பி. உதயகுமார்
இதில் தமிழ்நாடு ஆடவர் அணி, லீக் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மகளிர் பிரிவில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு மகளிர் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு மகளிர் அணி 19 புள்ளிகள் பெற்ற நிலையில், குஜராத் அணி 14 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது .
தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. STREET CHILD UNITED என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தெருவோர குழந்தைகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 25 ம் தேதி போட்டி தொடங்கி 30 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா சார்பில் 7 அணிகளும் பிற நாடுகளை சேர்ந்த 12 அணிகளும் பங்கேற்க உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆற்காடு நவாப் ஆசிப் அலி பேசியது, 6 மாதங்களுக்கு முன் என்னை STREET CHILD UNITED என்ற அமைப்பு தொடர்பு கொண்டு தெருவோர குழந்தைகளுக்கான உலகக்கோப்பை குறித்து பேசினர். அமீர் மஹாலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்த அனுமதி கொடுத்துள்ளோம்.
தெருவோர குழந்தைகளுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெறுவது நமது சென்னைக்கு பெருமை என்றார். போட்டியை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்
அமைச்சா் உதயநிதியை சந்தித்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சம் வரைவோலை வழங்கியுள்ளார் கால்ஸ் குழும தலைவர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கால்ஸ் குழுமத்தின் தலைவர் வாசுதேவன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு 25 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
மேலும், அவர் தெரிவிக்கையில் முதலமைச்சரின் பொறுப்பான ஆட்சியின் கீழும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான தலைமையின் கீழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு மேம்பாட்டு துறையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டை உலக அரங்கில் தலை நிமிரச்செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு கால்ஸ் குழுமம் பங்காற்றக் கூடிய வகையில் 25 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த நேர்மையான முயற்சியில் கால்ஸ் குழுமம் பங்காற்றி இருப்பது பெருமை அளிப்பதாக கால்ஸ் குழுமத்தின் தலைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மாலைமுரசு தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி சிவயோஹன், தலைமை செய்தி ஆசிரியர் அரவிந்த் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: நியோ மேக்ஸ் மோசடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு வீரர்கள் இல்லை என்பது வருத்தம் தான். இருந்தாலும் எதிர்காலத்தில் தமிழ்நாடு வீரர்கள் விளையாடுவதற்கான வகையில் வளர்ச்சியடைவோம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணம் கடந்த சில மாதங்களுக்கு முன் விண்வெளியில் இருந்து தொடங்கி, பல்வேறு நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, நாடு திரும்பியுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது!
12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளதை சிறப்பிக்கும் விதத்தில், "நம்ம சென்னை" யில் ஐசிசி உலகக் கோப்பை என்ற நிகழ்வில் உலகக் கோப்பை காட்சி படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வளாகத்தில் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, துணை செயலாளர் பாபா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி கூறியதாவது:-
” உலக கோப்பை நம்ம சென்னைக்கு வந்திருக்கிறது. இது மிகப்பெரிய நிகழ்வு. 2011 உலகக் கோப்பை போட்டிகள் இங்கே நடந்து முடிந்தது.
தோனியின் 2011 சிக்சர் பசுமையான நிகழ்வாக இருக்கிறது. முதல் போட்டியே சென்னையில், இந்தியா ஆஸி அணிகளுக்கு நடைபெறவுள்ளது.
வீரர்களின் சவுகரியத்திற்காக முக்கிய ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளது. இங்கு இருக்கக் கூடிய பெவிலியின் வேறு எங்கும் இல்லை என ஏற்கனவே பலர் கூறுவது நாம் அறிந்த ஒன்றே.
தமிழ்நாடு வீரர்கள் இல்லை என்பது வருத்தம் தான். இருந்தாலும் எதிர்காலத்தில் தமிழ்நாடு வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வகையில் வளர்ச்சி செய்யப்படும்.
மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டால் சூப்பர் சாபர் மற்றும் மைதானம் முழுவதும் மழை காலத்தை எதிர்கொள்ள தக்க உபகரணங்களுடன் தயாராக இருக்கிறோம்.
பாகிஸ்தான் அணி இங்கே விளையாடவில்லை என்பதை தாண்டி, ஆஸ்திரேலியாவும் நல்ல அணி தான். இந்த ஆட்டமும் சுவாரஸ்யம் குறையாது என நினைக்கிறோம் என்று பேசினார்.
பொதுமக்களின் பார்வைக்காக ஐசிசி உலகக் கோப்பை காட்சி படுத்தப்படவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றி கோப்பை, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், செப்.16 மற்றும் 17-ம் தேதி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”, என அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மணல் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடத்தில் ED ரெய்டு..! ஆவணங்கள் முடக்கம்