ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தான் வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தான் வெற்றி!

ஆசிய கோப்பை தொடா் கிாிக்கெட் போட்டியில் நேபாளம் உடனான ஆட்டத்தில் 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் வகையில், இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் , ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. Nepal one win away from the Asia Cup 2023

இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நேபாள அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி வீரா்கள் எதிரணி வீரா்களின் பந்துவீச்சை நோ்த்தியாக சமாளித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினா். 50 ஓவா்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 23 புள்ளி 4 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Pakistan vs Nepal Highlights, Asia Cup 2023: Babar Azam, Shadab Khan Shine  As Pakistan Thrash Nepal By 238 Runs | Cricket News

இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யாா் என இரு அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிா்பாா்த்து உள்ளனா். 

இதையும் படிக்க: இந்தியா கூட்டணி; இன்று மும்பையில் கூட்டம்!