பாகிஸ்தான் பகிர்ந்த வீடியோ...இந்திய வீரர்களை பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்...!

பாகிஸ்தான் பகிர்ந்த வீடியோ...இந்திய வீரர்களை பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்...!
Published on
Updated on
1 min read

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், அங்கு நிலவும் அசாதரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இன்று தொடங்கி வருகிற 11ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6  அணிகள் பங்கேற்கின்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அணிகளில், குரூப்-ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், குரூப்-பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் VS இலங்கை :

அதன்படி, துபாயில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள்:

தொடர்ந்து, நாளை நடைபெறும் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காயத்துடன் அமர்ந்திருந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அப்ரிடியை சந்தித்து இந்திய வீரர்கள் நலம் விசாரித்தனர்.

வைரலாகும் வீடியோ:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ள  வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பரம எதிரி நாடு என்பதை மறந்து, மனிதநேயத்துடன் பாகிஸ்தான் வீரரை சந்தித்து இந்திய வீரர்கள் நலம் விசாரித்ததை சமூகவலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com