இந்திய அணிக்கு கேப்டனாகிறார் பும்ரா?.. வெளியான தகவல்!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வேகபந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாகிறார் பும்ரா?.. வெளியான தகவல்!!

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின், பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.

இதையொட்டி அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் ரோகித் சர்மா நாளை நடைபெறும் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை எனக்கூறப்படும் நிலையில்,  துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் காயம் காரணமாக விலகியிருப்பதால், அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா கேப்டனாக செயல்பட்டால், 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெறுவார்.