என்னிடம் வலிமை அப்டேட் கேட்டது மறக்க முடியாது: மொயீன் அலி நெகிழ்ச்சி...

சேப்பாக்கம் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது என டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி தெரி்வித்துள்ளார்.

என்னிடம் வலிமை அப்டேட் கேட்டது மறக்க முடியாது: மொயீன் அலி நெகிழ்ச்சி...

சில மாதங்களுக்கு முன்பு வரை வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அவர்களிடம் வேடிக்கையாக வலிமை அப்டேட் கேட்டதால்  நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில்நடிகர் அஜித் குறிப்பிட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் சென்னையில் நடைபெற்றபோது இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, அஜித் ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டார். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் இதுபற்றி விசாரித்துள்ளார் மொயீன் அலி.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் தளத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது. அதேபோல, மைதானத்துக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள். அற்புதமாக இருந்தது என்றார்.