தொடையைத் தட்டி வெற்றியைக் கொண்டாடிய ஷிகர் தவான்...

இந்திய அணி வெற்றி உலகளவில் பெரிதாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடையைத் தட்டி வெற்றியைக் கொண்டாடிய ஷிகர் தவான்...
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை  2 - க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் 27 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்கள் 3 விக்கெட்களை இழந்து 105 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 

ஒரு கேலண்டர் ஆண்டில் அதிக வெற்றிப் பெற்ற சாதனைகளில் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து இந்திய அணி அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரின் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், பாரம்பரிய பஞ்சாபி முறை படி, தனது தொடையைத் தட்டிக் கொண்டு பெருமையாக பெற்றார்.

அதன் வீடியோவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

Winners Are Grinners! ☺️

Captain @SDhawan25 lifts the trophy as #TeamIndia win the ODI series 2️⃣-1️⃣ against South Africa
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com