ஸ்னூக்கரில் வெற்றி பெற்ற ஸ்ரீனிவாஸ்ஸுக்கு உற்சாக வரவேற்பு....

ஸ்னூக்கரில் வெற்றி பெற்ற  ஸ்ரீனிவாஸ்ஸுக்கு உற்சாக வரவேற்பு....

மலேசியாவில் நடந்த பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் போட்டியில் பதக்கம் பெற்ற சென்னை திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் உலக பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் போட்டி நடந்தது.  மலேசியா,  பக்ரைன், ஜெர்மனி, இந்தியா உள்பட பல நாடுகள் கலந்து கொண்டன.  இதில் தமிழகத்தில் இருந்து சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீனிவாஸ் ஸ்னூக்கர் போட்டில் பங்கேற்று தங்கம், வெண்கலம் பதக்கம் வென்றார். 

மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய ஸ்ரீனிவாசுக்கு தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் சங்க தலைவர் முரளிதரன் தலைமையில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

”மலேசியாவில் நடந்த பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் விளையாட்டிற்கு அரசு ஊக்கப்படுத்த வேண்டும். காமன்வெல்த் போட்டியில் பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் சேர்க்கப்பட உள்ளது. அதில் பதக்கம் வெல்வேன். ஸ்னூக்கர் விளையாட்டிற்கு அரசு தேவையான இட வசதி செய்து ஊக்கப்படுத்தினால் செஸ் போட்டி போல் உலக ஸ்னூக்கர் போட்டியும் நடத்தலாம்” என்றார். 

தமிழ்நாடு ஸ்னூக்கர் சங்க தலைவர் முரளிதரன் கூறுகையில், ”உலக சாம்பியன் பட்டத்தை தமிழகத்தை சேர்ந்தவர்  பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது. ஸ்னூக்கர் விளையாட்டிற்கு தேவையான உதவிகளை அரசு செய்து தந்தால் நிறைய பேரை உருவாக்க முடியும்” என்றார்.