75வது ஆண்டு சுதந்திர தினம்... மூத்த கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து...

சுதந்திர தினத்தில் மூத்த கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

75வது ஆண்டு சுதந்திர தினம்... மூத்த கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து...

பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியா, சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மூத்த கிரிக்கெட் வீரர்களான அனில் கும்பளே, சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்டோரும் டிவிட்டர் வாயிலாக வாழ்த்தியுள்ளனர்.

தனது ஹெல்மெட்டில் தேசியக்கொடி இருந்ததை நினைவு கூர்ந்து பேசிய சச்சின், எப்போதும் தேசியக் கொடிக்கான மரியாதையுடன் தான் அதனை அணிந்து கொண்டதாக டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நாட்டிற்காக இன்னுயிர் நீத்த போராட்டக் காரர்களை நினைவு கூர்ந்த யுவராஜ் சிங்,  சுதந்திரம் விலைமதிப்பற்றது என்றும், அதற்குரிய மரியாதையுடன் அதனை கொண்டாடுவோம் என்றும்  கூறியுள்ளார்.