ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகம் இருப்பதால் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. 206 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கணைகள் இந்த ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

வரும் 23 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளதை முன்னிட்டு வீரர்கள் டோக்கியோவுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டோக்கியோ கிராமத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று ஒலிம்பிக் போட்டியாளர்கள் தங்க இருந்த ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.