மகனுக்கு பந்து வீசி அவுட் ஆக்கிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ - இணையத்தில் வீடியோ வைரல்

மகன் என்றும் பாராமல் ஸ்டம்ப் அவுட் ஆக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ -யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
மகனுக்கு பந்து வீசி அவுட் ஆக்கிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ - இணையத்தில் வீடியோ வைரல்
Published on
Updated on
1 min read

தனது அசுர வேகத்தாலும், யாக்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்க செய்யக் கூடியவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ. பிரட் லீயின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பல பேட்ஸ்மேன்கள் திணறிய கதைகள் உண்டு. 

இந்த நிலையில் விடுமுறையை முன்னிட்டு பிரட் லீ தனது மகனுடன் கிரிக்கெட் விளையாட, அப்போது பேட்டிங் செய்வது தனது மகன் என்றும் பாராமல் பிரட்லீ யாக்கரை வீசி ஸ்டம்புகளை சிதறடித்துள்ளார். அத்துடன் நிற்காமல் பிரட்லீ, மூட்டை முடிச்சுகளை தூக்கிட்டு கிட்டு போ என்று கூற, அவரது மகன் சிரித்து கொண்டே சென்றார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com