அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன்..? - பரஸ் ஹம்ப்ரே விளக்கம்.

ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்கவில்லை என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அஸ்வினை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சேர்க்காதது பெரும் சர்ச்சையாகி வருகிறது. மேலும், இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, இதற்கு விளக்கம் அளித்த பந்து வீச்சுப் பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே கூறுகையில்,
ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து , கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று முடிவெடுத்ததாகவும், கடந்த காலங்களில் இந்த முடிவு தங்களுக்கு சாதகமாக இருந்ததாகவும் அதனாலேயே அஷ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சேர்க்கவில்லை எனவும் கூறினார்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்..!