டி-20 உலகக்கோப்பை அணிக்கு ஆலோசகராக பணியாற்ற தல டோனிக்கு சம்பளம் இல்லையாம்: உண்மையை சொன்ன பிசிசிஐ...

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுவதற்கு எம்.எஸ்.தோனி ஊதியம் எதுவும் பெறவில்லை என்று பிசிசிஐ தலைவா் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக்கோப்பை அணிக்கு ஆலோசகராக பணியாற்ற தல டோனிக்கு சம்பளம் இல்லையாம்: உண்மையை சொன்ன பிசிசிஐ...

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் தற்போது பங்கேற்று ஆடி வரும் இந்திய அணியினர் ஐக்கிய அரபு அமீரகத்திலே உள்ளனர். இந்திய அணி வரும் 24-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி விவரத்தை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.  இந்திய அணியின் ஆலோசகராக தோனி அறிவிக்கப்பட்டது எதிா்பாராத திருப்பமாக அமைந்தது. இந்திய அணிக்கு இது வலு சேர்க்கும் முடிவு என்றும் பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்திருந்தனா்.

டி20 மற்றும் ஒருநாள் தொடா்களில் தோனியின் தலைமையில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதால், உலகக் கோப்பை போட்டியின்போது அவரது அனுபவம் இந்திய அணிக்கு பலனளிப்பதாக இருக்கும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆலோசகராக செயல்பட முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கட்டணம் எதுவும் வேண்டாம் என கூறி விட்டதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட தோனி எவ்வித சம்பளம் வாங்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.