சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறார் தோனி!

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைக்க ரவீந்திர ஜடேஜா முடிவு செய்துள்ளார். இதனால், மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்கிறார்.
சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறார் தோனி!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் சென்னை அணி வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில் 9முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் 5 தடவை 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்ற நிலையில், 2 போட்டிகளில் மட்டுமே வென்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ரவீந்திர ஜடேஜாவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைக்க ரவீந்தர ஜடேஜா முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கு தோனியும் சம்மதம் தெரிவித்ததாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்ததாக பிசிசிஐ கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com