ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத ஜோகோவிச்..!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் ஏற்பட்ட பரிதாப நிலை..!

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத ஜோகோவிச்..!

தனது விசா ரத்துக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், தான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிக் கவலை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்க சென்ற ஜோகோவிச்சின் விசாவை, தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, அந்நாட்டு குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே ரத்து செய்தார். இதனை எதிர்த்து ஜோகோவிக் ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதனால் நாளை துவங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.