கொரோனா தொற்று எதிரொலி: கடைசி டெஸ்ட் போட்டி ரத்து...

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று எதிரொலி: கடைசி டெஸ்ட் போட்டி ரத்து...

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில்  5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற இருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோ தெரபிஸ்ட் யோகேஷூக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக, மான்செஸ்டரில் இன்று டெஸ்ட் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்றும் போட்டி அறிவிக்கப்பட்டபடி நடக்கும் என்றும் கூறப்பட்டது.     இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.  இந்திய வீரர்கள் கொரோனா அச்சம் காரணமாக விளையாட தயக்கம் காட்டிய நிலையில் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.