டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி...

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி திடீரேன அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி...

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார். எனினும் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடவுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்டுகள், 112 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார் மொயீன் அலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2914 ரன்களும் 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து மொயீல் அலி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  எனக்கு இப்போது 34 வயதாகிவிட்டது. என் விருப்பத்துக்கேற்ப கிரிக்கெட் ஆட்டங்களை நீண்ட காலம் விளையாட நினைக்கிறேன் என்றும் டெஸ்ட் கிரிக்கெட் அற்புதமானது. டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்து விளையாடினேன். ஆனால் அதன் தீவிரத்தன்மையால் சில நேரங்களில் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு விளையாடிவிட்டேன் என நினைக்கிறேன்.

 

இங்கிலாந்து இஸ்லாமியர்கள் கிரிக்கெட்டில் ஈடுபட இனி நான் ஊக்கமாக இருப்பேன் என நினைப்பதாக கூறியுள்ளார். இங்கிலாந்து வீரராக இல்லாவிட்டாலும் ஆம்லா எனக்கு அப்படித்தான் ஊக்கமளித்தார். என்னுடைய பெற்றோர், குடும்பத்தினர் என் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.