யூரோ கோப்பை கால்பந்து; இன்று தொடங்குகிறது அரையிறுதிப் போட்டிகள்.! 

யூரோ கோப்பை கால்பந்து; இன்று தொடங்குகிறது அரையிறுதிப் போட்டிகள்.! 

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்ட யூரோ கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகளும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நாளை அதிகாலை 12. 30 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதி போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 
 
உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின், இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  ஒரே ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இத்தாலி அணி, கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு விளையாடியுள்ள 32 போட்டியில் ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.