உலகக்கோப்பை கால்பந்து போட்டி...! ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா அணிகள் வெற்றி...!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி...! ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா அணிகள் வெற்றி...!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஆஸ்திரேலியா, போலந்து, பிரான்ஸ், அர்ஜெண்டினா அணிகள் வெற்றி பெற்றன.

22-வது உலக கோப்பை கால்பந்து தொடார் கத்தாரில் விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் 3:30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் துனிசியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் போலந்து - சவுதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் போலந்து அணி 2-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அசத்தியது.இதே போல், இரவு 9:30 மணிக்கு பிரான்ஸ் - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டியில்  2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ள பிரான்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.  இரவு 12:30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், அர்ஜெண்டினா அணி மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று, நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜப்பான்-கோஸ்டாரிகாவுடனும், மாலை 6:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெல்ஜியம்-மொராக்கோவுடனும், இரவு 9:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரோஷியா-கனடா அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. மேலும், இரவு 12:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிக்க : குடியிருப்பில் புகுந்த 15 அடி மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு...