
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது. லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை. மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது இன்சமாம் உல் ஹக் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் நலம்பெற கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பாகிஸ் தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.