கால்பந்து போட்டியில் திடீரென மயங்கி விழுந்த பிரபல வீரர்...!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது, மயங்கி விழுந்த டென்மார்க் வீரர், நலமுடன் திரும்பி வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கால்பந்து போட்டியில் திடீரென மயங்கி விழுந்த பிரபல வீரர்...!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது, மயங்கி விழுந்த டென்மார்க் வீரர், நலமுடன் திரும்பி வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இத்தாலி தலைநகர் ரோமில் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்ஸனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவர்கள் மீட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் இந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்ஸனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது சக வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்வது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..