ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் பெடரர்...

ரோஜர் பெடரர், முழங்கால் காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் பெடரர்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டித் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

கடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் போது முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்  ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், ரோஜர் பெடரர் குறிப்பிட்டுள்ளார்.