சாரே கொல மாஸ்.. 73 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி இறுதிசுற்றுக்கு தேர்வு!!

சாரே கொல மாஸ்.. 73 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி இறுதிசுற்றுக்கு தேர்வு!!

73 ஆண்டுகளாக நடைபெறும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ள இந்திய ஆடவர் அணி, இந்தோனேஷியாவை இன்று எதிர்கொள்கிறது.

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை எதிர்கொண்ட இந்திய அணி, போராடி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

1949-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இப்போட்டியில் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தநிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் இந்தியா ஆடவர் அணியினர் மோதவுள்ளனர்.