ஹர்பஜன் சிங் வீட்டில் புதுவரவு...! மகன் பிறந்திருப்பதாக ட்விட்டரில் நெகிழ்ச்சி..!

ஹர்பஜன் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை..!
ஹர்பஜன் சிங் வீட்டில் புதுவரவு...! மகன் பிறந்திருப்பதாக ட்விட்டரில் நெகிழ்ச்சி..!
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பன் சிங். கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான அவர், தொடர்ந்து இந்தியாவிற்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ள அவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலியான நடிகை கீதா பஸ்ராவை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, ஹர்பஜன், கிரிக்கெட்டில் கலக்கியதை அடுத்து சினிமாவிலும் கலக்கி வருகிறார். ஏற்கனவே பல ஹிந்தி படங்களில் நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். 

ஹிந்தியை தொடர்ந்து, தமிழில் சந்தானம் நடிப்பில் உருவாகிய டிக்கிலோனா மற்றும் அர்ஜூன், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஹர்பஜன் சிங். 

ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ட்விட்டர் வாயிலாக இதனை தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com