டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஹசரங்கா ஓய்வு!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஹசரங்கா ஓய்வு!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். 

வனிந்து ஹசரங்கா (26) இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று வருகினார். உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால், ஒரு நாள் போட்டி, சர்வதேச டி20 போட்டி போன்ற போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இவர் மொத்தத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடியுள்ளார். 

2020ல் நடந்த இலங்கை vs சவுத் ஆப்ரிக்கா, 2021ல் இலங்கை vs சவுத் ஆப்ரிக்கா, இலங்கை vs இங்கிலாந்து மற்றும் இலங்கை vs பங்களாதேஷ் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

அண்மையில், நியூசிலாந்து அணியின் வீரர் போல்ட், அந்நாட்டு அணியின் ஒப்பந்தம் தேவையில்லை என வெளியேறியதுடன், பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாடுவதால் அதிக வருவாய் கிடைப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். தற்பொழுது டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள ஹசரங்கா, பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாடவுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க || சினிமா வில்லனை மிஞ்சிய திமுக கவுன்சிலர்... காவல்துறையும் உடந்தை!!