டிராவில் முடிந்த ஹாக்கி போட்டி... 2ம் இடம் பிடித்த இந்திய அணி...

ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்தது.

டிராவில் முடிந்த ஹாக்கி போட்டி... 2ம் இடம் பிடித்த இந்திய அணி...

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. ரூர்கேலாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில், ஆரம்ப முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆனால் அந்த முயற்சியில் இரு அணிகளும் இறுதி வரை வெற்றி பெறவில்லை. இதனால், இந்த போட்டி டிராவில் முடிந்தது.

மேலும் படிக்க | "உலகக்கோப்பை ஹாக்கி".. இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

தற்போது, குரூப்-டி பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற, வருகிற 19-ம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும்.

மேலும் படிக்க | "இந்தியா - இலங்கை" - இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..!