ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு... கோலி, சிராஜ் முன்னேற்றம்...

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, சிராஜ் முன்னேறியுள்ளனர்.
ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு... கோலி, சிராஜ் முன்னேற்றம்...
Published on
Updated on
1 min read

ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறினார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது , இடத்துக்கு முன்னேறினார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ரஸ்ஸி வான் டெர் டசன் (தென் ஆப்பிரிக்கா ) 3வது இடத்தில் டி காக் (தென் ஆப்பிரிக்கா ) உள்ளனர்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் பவுல்ட் முதல் இடத்திலும், ஹேஸ்லேவுட் (ஆஸ்திரேலியா) 2வது இடத்திலும், இந்திய வீரர் சிராஜ் 3வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) முதல் இடத்திலும் , முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 2 வது இடத்திலும் , மெஹதி ஹசன் (வங்காளதேசம்) , 3வது இடத்திலும் உள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ரன்கள்  குவித்த விராட் கோலி தரவரிசை பட்டியலில் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதே போல் அண்மையில் நடந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தரவரிசை பட்டியிலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com