ஐ.பி.எல். தொடரின் 39 ஆவது லீக் போட்டி... பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேற்றம்...

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 39 ஆவது லீக் போட்டி... பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேற்றம்...

ஐ.பி.எல். போட்டியின் நேற்றய 39-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். 

நட்சத்திர வீரர் படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பவர்பிளே முடிவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 24 ரன்களில் குவிண்டன் டிகாக் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பிறகு மும்பை அணிக்கு மளமளவென விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. இஷான் கிஷன் 9 ரன்களிலும்,  அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் வெளியேறினர். குருனால் பாண்டியா 8 ரன்களில் பவுல்ட் ஆனார்.  இதைத் தொடர்ந்து ஹர்ஷத் பட்டேல் 17-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், ராகுல் சாஹர் ஆகியோரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக 18 புள்ளி ஒரு ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முன்னதாக நடைபெற்ற மற்றோரு லீக் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஜடேஜா சென்னை அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.