ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ட்வீட்டை, சிறிது நேரத்திலேயே நீக்கிய அம்பத்தி ராயுடு! குழப்பத்தில் ரசிகர்கள்

ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ட்வீட்டை, சிறிது நேரத்திலேயே நீக்கிய அம்பத்தி ராயுடு! குழப்பத்தில் ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடருடன், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு, சற்று நேரத்தில் தன்னுடைய ட்வீட்டை நீக்கியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐ.பி.எல்லின் தலைசிறந்த 2 அணிகளுக்காக, 13 ஆண்டுகாலம் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ராயுடு, இதுவே தன்னுடைய கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும் எனப் பதிவிட்டிருந்தார்.

ஆனால், அடுத்த சிறிது நிமிடங்களிலேயே தன்னுடைய ட்விட்டர் பதிவை ராயுடு நீக்கியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.