குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.. 5 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி!

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பரப்பான கடைசி ஓவரில் டேனியல் சாம்ஸ் அசத்தலாக பந்துவீச, மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.. 5 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51வது போட்டி, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் இஷான் கிஷன் 45 ரன்களும், டிம் டேவிட் 44 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களும் விளாசினர்.

பின்னர், 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு, சுப்மன் கில், விருத்திமான் சஹா இணை சிறப்பான தொடக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் கில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, சஹாவும் 55 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் மில்லர் அதிரடியாக விளையாட கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குஜராத் அணி எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை அசத்தலாக வீசிய டேனியல் சாம்ஸ், 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை வசமாக்கினார்.

கடைசி ஓவரில் ஏற்பட்ட திருப்பத்தால் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்று குஜராத் அணிக்கு அதிர்ச்சியளித்தது. இதன்மூலம், தொடரில் 2வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் புள்ளிகள் பட்டியலில் 8 வெற்றிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.