10 வருடங்களாகியும் ஐபிஎல் சம்பளம் கிடைக்கவில்லை - ஆஸ்திரேலிய வீரர் புகார்..

10 வருடங்களாகியும்  ஐபிஎல் சம்பளம் கிடைக்கவில்லை - ஆஸ்திரேலிய வீரர் புகார்..

ஐபிஎல் தொடரில் 10 வருடங்களுக்கு முன்பு விளையாடிய ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாட்ஜ்க்கு  இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தற்போது எழுந்துள்ளது.

2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ இன்னும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு வழங்கவில்லை என செய்திகள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ அவசர கதியில் இந்திய வீராங்கனைகளுக்கு அந்த பரிசுத்தொகையை வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இது குறித்து அறிந்த பிராட் ஹாட்ஜ் 2011-ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய தமக்கும் இன்னும் ஐபிஎல் தொகை நிலுவையில் உள்ளதாகவும், பிசிசிஐ இதை உடனே பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.