ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்...சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்...சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

அதன்படி அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்திலேயே குஜராத் டைட்டன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்த ராகுல்காந்தி விவகாரம்... இருஅவைகளும் ஒத்திவைப்பு!

இந்நிலையில் 10 அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 70 லீக் ஆட்டங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளதையடுத்து, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விலை ஆயிரத்து 500 ரூபாய் முதல் இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை, ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று காலை 9:30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், டிக்கெட் வாங்குவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். சென்னை சேப்பாக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறுவதால், தோனி, ஜடேஜா உள்ளிட்ட சென்னை வீரர்களை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.