கவுதம் கம்பீருக்கு இரண்டாவது முறையாக ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்..!

காஷ்மிர் பிரச்னையில் இருந்து ஒதுங்குமாறு தீவிரவாதிகள் வீடியோ மூலம் மிரட்டல்..!

கவுதம் கம்பீருக்கு இரண்டாவது முறையாக ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு, 2-வது முறையாக ஐ. எஸ்.ஐ. எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. தாங்கள் உன்னை கொலை செய்ய நினைத்ததாகவும், ஆனால் நீ தப்பித்து விட்டாய் எனவும் குறிப்பிட்டுள்ள ஐ. எஸ்.ஐ. எஸ். பயங்கரவாதிகள், உங்கள் குடும்ப வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அரசியலில் இருந்தும், காஷ்மீர் பிரச்னையில் இருந்தும் விலகி இருங்கள் என கவுதம் கம்பீருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கம்பீரின் வீட்டை வீடியோ எடுத்து, சிறிது விநாடிகள் ஓடக் கூடிய வீடியோவுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து, அவரது வீட்டுக்கு மேலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீசார், தற்போது வந்த மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.