44 வயதை அடைந்த இமிடேஷன் பந்து கண்டுபிடிப்பாளர்...!!

44 வயதை அடைந்த இமிடேஷன் பந்து கண்டுபிடிப்பாளர்...!!
Published on
Updated on
1 min read

இந்தியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் இன்று 44 வயதை எட்டியுள்ளார். தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், ஜாகீர் மொத்தம் 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பொறியியலாளர் டூ கிரிக்கெட்டர்:  

2011 உலகக் கோப்பையில் அவர் கண்டுபிடித்த  'இமிடேஷன் பந்து' எதிரணியினரிடையே பீதியை உருவாக்கியது.  ஜாகீர் ஒரு கிரிக்கெட் வீரராக மாற விரும்பவில்லை. அவர் ஒரு பொறியியலாளர் ஆக விரும்பினார், ஆனால் அதிர்ஷ்டம் அவரை நட்சத்திரமாக்கியது.

தந்தையின் கனவிற்காக...:

1978-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரின் ஸ்ரீராம்பூரில் பிறந்த  ஜாகீர் கான் பொறியாளர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டார். ஆனால் அவரது தந்தை அவரிடம், ”மகனே நாட்டில் பல பொறியாளர்கள் உள்ளனர், நீ வேகப்பந்து வீச்சாளராகி நாட்டுக்காக விளையாடு.” என்று கூறி அவரை 17 வயதில் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சர்வதேச அறிமுகம்:

மும்பை மற்றும் மேற்கு மண்டலத்தின் 19 வயதுக்குட்பட்ட அணியில் சேர்க்கப்பட்டார் ஜாகீர்.   அதன் பிறகு, MRF பேஸ் அகாடமி மூலம் வேகமாக முன்னேறி, இந்திய அணியில் இடம்பிடித்து வெற்றியின் ஏணியில் ஏறத் தொடங்கினார்.   2000 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார் ஜாகீர்.

இந்தியாவுக்காக...:

14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவுக்காக  மொத்தம் 92 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 17 சர்வதேச டி20 போட்டிகளில் ஜாகீர் பங்கேற்று 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக, ஜாகீர் 309 சர்வதேச போட்டிகளில் 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் நாட்டின் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பையில்..:

2007 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைக்கான அணியில் சிறப்பான ஆட்டத்தால் தனது இடத்தை உறுதிப்படுத்தினார் ஜாகீர். 2003 உலகக் கோப்பையில் கங்குலியின் தலைமையிலான அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து செல்வதில் ஜாகீர் முக்கியப் பங்காற்றினார். உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் ஜாகீர் கான் பெற்றுள்ளார். அவர் 23 உலகக் கோப்பை போட்டிகளில் 20.22 சராசரியில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com