இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை...கடைசி ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார்?

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டி-20 கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை...கடைசி ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார்?

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் 4 போட்டிகளில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் தொடரில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் 5வது டி-20 போட்டி, பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் அபாரமாக விளையாடி வெற்றிவாகை சூடிய ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் என்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

அதேநேரம் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியும், இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் தயாராகி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.